தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தேதி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இன்று முதல் ரேண்டம் எண் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஜூன் இரண்டாம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ரேண்டம் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொறியல் படிப்பிற்கு 2,29,165 மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 18000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வழங்கப்பட உள்ளதை அடுத்து அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.