Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:27 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பதும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை சனிக்கிழமையும் வேலை நாள் தான் என்றும், எனவே நாளையும் வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடாத நிலையில் இன்று சுயேச்சைகள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments