இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (14:44 IST)
அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை முதல் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க  சங்க நிர்வாகிகள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என்றும்  அறிவித்துள்ளனர்.
 
சிஐடியு சௌந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்தும் ஓடாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
 நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர் என்றும்  கண்டிப்பாக எங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

அடுத்த கட்டுரையில்
Show comments