Publish Date: Sat, 10 Sep 2022 (08:24 IST)
Updated Date: Sat, 10 Sep 2022 (08:26 IST)
தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் மின்ஸ் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது
மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் மின்சார கட்டணம் உயர்ந்தாலும் 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மின்சார கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது