Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுடன் இணையும் கொடூர வெயில்: இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (07:25 IST)
அக்னி நட்சத்திரம் என்ற கொடூர வெயில் இன்று முதல் ஆரம்பம் ஆக இருப்பதால் கொரோனாவுடன் சேர்ந்து இந்த அக்னி நட்சத்திரத்த வெயிலையும் மக்கள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுடன் தற்போது அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையையும் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
 
இன்று முதல் அடுத்த 24 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கும் அக்னி நட்சத்திர வெயில் மே 28-ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னரும் அதன் தாக்கம் ஒரு சில நாட்கள் இருக்கும் என்பதால் இந்த மாதம் முழுவதுமே பொதுமக்கள் வெயிலால் கஷ்டப்பட உள்ளனர் 
 
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருப்பதால் வெயிலில் இருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஊரடங்கு தளர்வு காரணமாக வெளியில் செல்லும் வியாபாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்த கொரோனாவுடன் கொடூர உயிரையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்றும் தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பம் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இருப்பினும் சென்னையில் வெயில் இந்த ஆண்டு மிக அதிகமாக இருந்தாலும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் குடையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments