கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி என்றாலே முருங்கை காய்கள் தான் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தெரியவரும், அப்படி பட்ட முருங்கைகாய்களான கடந்த சில தினங்களாகவும், சில வாரங்களாகவும் முருங்கை கிலோ ரூ 7 லிருந்து அப்படியே குறைந்து ரூ 2 ற்கு விற்றது. இந்நிலையில், வரத்து அதிகம் தான் காரணம் என்று இருக்க, தற்போது வரத்து அதாவது சீசன் குறைந்து வரத்து குறைவாக காணப்படும் நிலையில், தற்போது ஒரு கிலோ முருங்கை ரூ 20 லிருந்து 25 வரை ஏலம் போகின்றது.
மேலும், இங்கு சாக்குப்பைகளிலும், அட்டைப்பெட்டிகளிலும் கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்களானது, பெங்களூரு, ஹைதராபாத், குருவாயூர், மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கின்றது. ஏற்கனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கை ஒரு கிலோ ரூ 2 தானா ? என்று விரக்தியில் இருந்த நிலையில், தற்போது., ஒரு கிலோ ரூ 20 லிருந்து 25 வரை விற்பனை செய்யப்படுவது மிக்க மகிழ்ச்சியை ஒரு புறம் ஏற்படுத்தினாலும், அந்த அளவிற்கு வியாபாரம் செய்ய முருங்கைக்காய்கள் இல்லையே என்று ஒரு புறம் கவலையும் அடைய செய்துள்ளது.
இருப்பினும் விலை குறைந்தாலும், சரி, விலை ஏற்றம் அடைந்தாலும் சரி தங்களது கொள்முதலில் எந்த வித தடையும் இல்லாமல் உள்நாட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனர் அப்பகுதியில் இயங்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள்.