கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன என்பதும் ஆன்லைனில் தான் பல பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளிகள் மூலம் தான் தற்போது வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று 7 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜூன் 28 முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை முறை மீண்டும் தொடங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது