Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்லட் நாகராஜிடம் ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (18:15 IST)
கடந்த வாரம் சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளாவிற்கும்,பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்த புல்லட் நாகராஜன் அவர்களை மிரட்டியதுடன், அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? உங்கள் மேல் லாரி ஏறும் என கொலை மிரட்டல்களும் விடுத்தார்.

 
தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகே உள்ள ஜெயமங்களம் தான் இந்த புல்லட் நாகராஜனின் ஊராகும். ஏற்கனவெ இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.மதுரை சிறையில் வைத்து இவரது அண்ணனை தாக்கியதாகவும், சிறைத் துறை பெண் அதிகாரிகளுக்கு இவர் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வந்தார்.
 
இந்நிலையில், போலீஸார் இன்று இவரை தேனியில்  வைத்துக் கைது செய்தனர். அப்போது ரவுடி புல்லட் நாகராஜிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள், போலி துப்பாக்கிகள் மற்றும் நீதிபதி பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
 
காவல் நிலையத்தில் ஏற்கனவே இவர் மீது ஆள்கடத்தல், வழிபறி  கொலை, கொள்ளை, போன்ற ஏராளமான வழக்குகள் இருந்த நிலையில்தான் புல்லட் நாகராகஜன் இந்த மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments