Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி : டுபாக்கூராக வலம் வந்த புல்லட் நாகராஜ்

Advertiesment
கள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி  : டுபாக்கூராக வலம் வந்த புல்லட் நாகராஜ்
, திங்கள், 10 செப்டம்பர் 2018 (14:10 IST)
உயர் காவல் அதிகாரிகளை செல்போனில் மிரட்டி பேசி ஆடியோ வெளியிட்டு தற்போது கைதாகியுள்ள புல்லட் நாகராஜ் ஒரு டுபாக்கூர் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.

 
தேனியை சேர்ந்த புல்லட் நாகராஜ் என்பவர், மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளா, தென்கரை ஆய்வாளர் மதனகலாவை செல்போனில் மிரட்டல் விடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட ஆடியோக்கள் வைரல் ஹிட்டானது. அவர் பேசும் ஸ்டைல், ஆங்கிலம் அனைத்தும் பலரையும் சிரிக்க வைத்தது.
 
அந்த ஆடியோவில் தன்னுடைய சிறையில் இருக்கும் சகோதரர் மற்றும் அவரின் ஆட்களுக்கு போலீசார் எந்த சிறை அதிகாரிகளும் தொல்லை கொடுக்கக் கூடாது என எச்சரித்ததோடு, என்னை முடிந்தால் கைது செய்யுங்கள். அப்படி செய்தால் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறேன் என மிகவும் தெனாவட்டாக பேசியிருந்தார். இதையடுத்து, எஸ்.பி. ஊர்மிளா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் புல்லட் நாகராஜை தேடி வந்தனர்.
 
அதேபோல், நேற்று மூன்றாவதாக ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், என் வீட்டில் என் அப்பா, அம்மா அவர்களை போலீசார் நிறுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் போலீசார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். என்னை உங்களால் பிடிக்க முடியாது. நான் நினைத்தால் மட்டுமே உங்களின் முன் வருவேன் என மீண்டும் தெனாவட்டாக பேசியிருந்தார். 
webdunia

 
இந்நிலையில், இன்று பெரிய குளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கரையில் இருசக்கர வாகனத்தில் புல்லட் நாகராஜ் சென்ற போது பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் அவரை விரட்டி சென்று பிடித்துள்ளார். 
 
அவரிடமிருந்து 2 போலி துப்பாக்கிகள், 2 கத்திகள், போலி அடையாள அட்டைகள், போலி நீதிபதி ரப்பர் ஸ்டாம்புகள், வக்கீல் கவுன் கள்ள நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் வழக்கறிஞர் படிப்பை படிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், அவரின் மோட்டார் சைக்கிளில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். ஆனால், அவர் பத்திரிக்கையாளரும் அல்ல. எனவே, போலியாக பல அடையாள அட்டைகளை தயார் செய்து வலம் வந்துள்ளார் புல்லட் நாகராஜ்.
 
வாட்ஸ்-அப் ஆடியோவில் தம்மட்டம் அடித்துக்கொண்டது போல் அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. சின்ன சின்ன தவறுகளை மட்டுமே செய்து விட்டு சிறைக்கு சென்றுவிட்டு, தன்னை பெரிய ரவுடி போல் அவர் பில்டப் கொடுத்து வந்தார் என அப்பகுதி மக்கள் அவரை பற்றி சிரித்துக்கொண்டே கூறியுள்ளனர்.
 
இதை வைத்து பார்க்கும் போது, புல்லட் நாகராஜ் ஒரு டுபாக்கூர் பேர் வழி என்பதும், செல்போனில் வெத்தாக பில்டப் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘எனக்கு பணத்தை செலவழிக்க நேரமில்லை’ - கோடிகள் வேண்டாம் ஆசிரியர் பணி போதும்