ஆகஸ்ட் 18 முதல் சென்னையில் டாஸ்மாக் திறப்பு: ஆனால் சில நிபந்தனைகள்!

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (20:26 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர தமிழகம் முழுவதும் சமீபத்தில் கடந்த மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் கூட டாஸ்மாக் விற்பனை ஜோராக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது சென்னையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும். ஆனால் பெரிய மால்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது. மேலும்  நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments