இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், கூறியிருப்பதாவது,
"சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அக்டோபர் 8 முதல் 16 ஆம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை கால நீதிமன்றம் 14 ஆம் தேதி செயல்படும்.
விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர கால வழக்குகளை விசாரிப்பார்கள்.
விடுமுறை கால நீதிமன்றம் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 வரை செயல்படும்.”என்றார்.