Publish Date: Thu, 24 Aug 2023 (15:27 IST)
Updated Date: Thu, 24 Aug 2023 (15:28 IST)
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே இயங்கி வரும் மின்சார ரயில் ஆகஸ்டு 27ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூபாய் 279 கோடி செலவில் நான்காவது ரயில் தடம் அமைக்கப்பட்ட உள்ளது. இந்த பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணியின் காரணமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும் மீண்டும் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Siva
Publish Date: Thu, 24 Aug 2023 (15:27 IST)
Updated Date: Thu, 24 Aug 2023 (15:28 IST)