Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் உண்மையான நண்பன்?

யார் உண்மையான நண்பன்?

யார் உண்மையான நண்பன்?
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (15:49 IST)
’அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தில், கவிஞர் கண்ணதாசன் நட்பை பற்றி கூறியவையில் முக்கிய அம்சங்கள் நண்பர்கள் தின சிறப்பு கட்டுறையாக வெப்துனியா வாசகர்களுக்கு: படித்து பயன்பெறுங்கள்!


 


உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.  ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதிசெய்பவன், கூழைக்கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.  எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்! ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளும்முன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
நன்றாக ஆராய்ந்து, ‘இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.

நல்ல நண்பனைத்தேர்ந்தெடுப்பது எப்படி?

யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக்கருதக் கூடாது.  வெறும் பழக்கமாகத்தான் கருத வேண்டும். உனக்கு கஷ்டம் வந்தபோது அவன் கை கொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னைப்ற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.  பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்கமுடியும்.

தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிற தென்னைமரம் போன்ற நண்பனை நாம் தேர்வு செய்யக்கூடாது.

பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பிதில்லை. அதுதானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத்தானாகவே வளர்கிறது. தனது ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், ஆகையால், பனைமரம் போன்று நண்பனை தான் தேர்வு செய்ய வேண்டும்.

- கவிஞர் கண்ணதாசன்

நன்றி!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராசூட்டிலிருந்து விழுந்த ஒருவர் பலி : கோவையில் பரிதாபம்