Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராசூட்டிலிருந்து விழுந்த ஒருவர் பலி : கோவையில் பரிதாபம்

பாராசூட்டிலிருந்து விழுந்த ஒருவர் பலி : கோவையில் பரிதாபம்
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (15:39 IST)
கோவையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் பாராசுட்டிலிருந்து கீழே இறங்க முயற்சித்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.


 

 
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் மல்லேஸ்வரராவ். ஒரு மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு, கொடிசியா மைதானத்தில் பாராசூட்டில் பயணிக்கும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அதில் மல்லேஸ்வரராவ் கலந்து கொண்டு பாராசூட்டில் மேலே பறந்தார். அதன்பின் அவர் மைதானத்தில் கீழே இறங்க முயற்சி செய்தார். அப்போது துரதிஷ்டவசமாக அந்த பாராசூட் விரியவில்லை. எனவே அவரின் உடல் வேகமாக தரையில் மோதி பலத்த காயமடைந்தார்.
 
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்களுக்கு நன்றி சொன்ன எம்.ஆர்.விஜயபாஸ்கர்