தமிழகம் முழுதும் 32 மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள பஸ்நிலையம், பூங்கா போன்ற இடங்களில் இலவச ‘வைபை’ வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் ஜெயலலிதா அரசு, தற்போது இலவச வைபை வசதியை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்ப்பில் தொடங்க திட்டமிட்டப்படுள்ளது.
அரசு கேபிள் டி.வி நிறுவனம் முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் இலவச வைபை வசதியை தொடங்கவுள்ளது. முக்கியமாக பேருந்து நிலையம், பூங்கா போன்ற இடங்களில் இந்த வசதியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.