Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரிய வாய்ப்பு - இலவசமாக தொழிற்பயிற்சி பெறலாம்

அரிய வாய்ப்பு - இலவசமாக தொழிற்பயிற்சி பெறலாம்

Advertiesment
அரிய வாய்ப்பு - இலவசமாக தொழிற்பயிற்சி பெறலாம்
, வெள்ளி, 17 ஜூன் 2016 (17:10 IST)
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அதிரடி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
 

 
தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
 
இந்த தொழிற்பயிற்சி மையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்டீரிசியன், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 30 ஆயிரம் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளது. 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயின்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு உச்ச வயது 40 ஆகும்.  பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 
 
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் அனைத்து தொழிற்பயிற்சி மையங்களிலும் ம் சேர்ந்து தொழிற்பயிற்சி பெறலாம். 
 
இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தேன்கூடு' தலைமுடி அலங்காரத்தை கண்டுபிடித்த பெண் மரணம்