Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கிய 4 தொகுதிகள் இவைதான்.. ஒரு தொகுதியை மாற்ற கோரிக்கை..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (18:28 IST)
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த நான்கு தொகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட்டு வரும் நிலையில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது புரியாத புதிராக இருந்தது.

அதிமுக மற்றும் பாஜக இரண்டு கூட்டணிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது
 
வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கி உள்ளதாக அதிமுக குறிப்பிட்டுள்ள நிலையில் வட சென்னை தொகுதிக்கு பதில் வேறு தொகுதியை ஒதுக்குமாறு அதிமுகவுடன் தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நான்கு தொகுதிகள் தான் தேமுதிக ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments