Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி எதிர்க்கணும்னு தமிழகத்திடம் கத்துக்கோங்க! – உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (11:43 IST)
தேசிய கல்விக் கொள்கையை பல மாநிலங்களும் எதிர்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மீது பல மாநில அரசுகளும் விமர்சனங்களை வைத்துள்ளன. தமிழ்நாடும் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்க முடியாது என தீவிரமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க தனி நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா “புதிய தேசிய கல்விக் கொள்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அடிப்படை உரிமை மற்றும் சமத்துவத்திற்கு எதிரான இக்கொள்கையை எதிர்க்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டின் நடைமுறையை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments