Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் திமுக முதல்வர் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (08:21 IST)
புதுவையின் முன்னால் முதல்வரும் திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
ஆர்.வீ.ஜானகிராமன் அவர்கள் கடந்த 1996ஆம் ஆண்டு மே 26 முதல் 1999ஆம் ஆண்டு  மார்ச் 18 வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தவர் என்பதும், இவர் புதுவையின் நெல்லித்தோப்பு என்ற தொகுதியில் இருந்து 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.வீ.ஜானகிராமன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணிக்கு  அவர் காலமானார். மறைந்த ஆர்.வீ.ஜானகிராமன்  உடல் நாளை காலை 10.30 மணிக்கு மரக்காணம் ஆலந்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களை நேரில் சந்தித்து திமுக எம்பி கனிமொழி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments