Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7 அடி உயர சிலை திறப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7 அடி உயர சிலை திறப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல்  கலாமின் 7 அடி உயர சிலை திறப்பு
, புதன், 27 ஜூலை 2016 (09:51 IST)
ராமேஷ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலையை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.


 


இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்திய ஏவுகணை நாயகன், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி, சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், மற்றும் அனைவராலும் மதிக்கதக்க மாமனிதர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜுலை 27-ம் தேதி, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இதை அடுத்து, மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு நினைவிடத்தில், மணிபண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, அப்துல் கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலையை மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் மனோகர் பரிக்கர் திறந்து வைத்தனர். இந்நிகழச்சியில், தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா,  நிலோபர் கபில்,ஆகியோரும், பாஜக சார்பாக தமிழிசை சவுந்திர்ராஜன், பொண்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சல்மான் கான் உருவபொம்பை எரிப்பு