மீண்டும் திமுகவில் முன்னாள் அமைச்சர்: ஸ்டாலின் அனுமதி

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:24 IST)
திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக கட்சியில் இருந்து விலகியவர்கள், கட்சியில் இருந்து டிஸ்மிஸ் ஆனவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.

அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை மீண்டும் திமுகவில் சேர்க்க மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முல்லைவேந்தன் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திமுகவின் வெற்றியை பாதிக்கும் வகையில் முல்லைவேந்தன் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தேமுதிகவில் சேர்ந்தாலும் அக்கட்சியில் அதிக ஆர்வம் காட்டாமல் கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து முல்லைவேந்தன் ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முல்லைவேந்தன் போலவே அழகிரியும் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 15 கிலோமீட்டர் 25 ஆயிரம் ரூபாய்.. விளம்பரத்திற்காக ரீல் விடும் இம்ரான் கான்..நிரூபணமான உண்மை