Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு: தலைமறைவானதாக தகவல்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (07:43 IST)
நாடோடிகள் என்ற படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்தார் என்பதும் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை நேற்று பார்த்தோம்
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் அவர் தற்போது தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் காவல்துறையினர் விரைவில் அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் ஐந்து வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் தன்னை அடைத்துக் கொடுமைப் படுத்தியதாகவும் தன்னுடைய புகைப்படங்களை வைத்து மிரட்டி வருவதாகவும் நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியின் பிறந்த நாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் பெண் எம்பி விமர்சனம்..!

உருவாகிறது ‘அரபு நேட்டோ’.. 22 நாடுகள் இணைந்து எடுத்த முடிவு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

ஏற்கனவே 3 குழந்தைகள்.. இன்று ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மொத்தம் 7 குழந்தைகள்..!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்