Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 27 பிப்ரவரி 2025 (12:25 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருக்கழுக்குன்றத்தில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக நிர்வாகி மீது நடந்த மீதான தாக்குதலை கண்டித்து, திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
 
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பே, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதாகவும், இதனை அடுத்து, காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
 
இதனை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.47 கோடி அமெரிக்க டாலர்களை மாணவிகள் கடத்தினார்களா? 2 பேர் கைது..!

ஏற்ற இறக்கமின்றி மந்தமாக வர்த்தமாகும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

குறி வெச்சா இரை விழணும்.. கப்பலை தாக்கும் புதிய ஏவுகணை சோதனை! - இந்தியா சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments