முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:26 IST)
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்த இந்திரகுமாரி கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்

 இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அவருக்கு இலக்கிய அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இந்திர குமாரி ஊழல் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கும் அவரது கணவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திர குமாரி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி நேற்று அவர் காலமானார்

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக இலக்கிய அணி தலைவர் இந்திர குமாரி மறைந்த துயரை செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது என்றும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இந்திர குமாரி தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர் என்றும் முதல்வர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments