Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிழந்த பட்டதாரி குடும்பத்திற்கு தனது ஓய்வூதியத்தை வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

Advertiesment
உயிரிழந்த  பட்டதாரி குடும்பத்திற்கு தனது  ஓய்வூதியத்தை வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (20:06 IST)
கரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பொறியியல் பட்டதாரி குடும்பத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஒரு மாத ஓய்வூதியத்தை வழங்கினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் காமராஜ். இவர் தான் 5 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஒவ்வொரு மாதமும் தான் பெற்ற சம்பளத்தை தொகுதிக்குட்பட்ட குழந்தைகளின் படிப்பு, பலரின் மருத்துவம் செலவிற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கி வைத்தார். இந்த நிலையில் கடந்த 2016 பொது தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தேர்தலில் நிற்கவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு மாதம் தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகை 20 ஆயிரத்தை பல நல்ல காரியங்களுக்கு வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட பள்ளபாளையம் கிராமத்தை சார்ந்தவர் இளைஞர் கோபிநாத். பொறியியல் பட்டதாரியான இவர் தனக்கு வேலை கிடைக்காத நிலையில் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் சுக்காலியூர் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டுமானப் பணியின் போது பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த கோபிநாத் மீது மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானார். இதனையடுத்து கோபிநாத் கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 14ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அங்கு சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ். கோபிநாத்தின் பெற்றோரிடம் தன்னுடைya ஒரு மாத கால ஓய்வுத் தொகை 20 ஆயிரத்தை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்