Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

Mahendran
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (11:53 IST)
வங்கக் கடலில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, சென்னையை பயமுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறிய போது, அக்டோபர் 20ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய மேலடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. 
 
இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்தடுத்து மேலும் சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து கூறியபோது, ‘இந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்த நிலையில் நீடிக்கும் என்றும், எனவே சென்னை உள்பட தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், எந்தெந்த பகுதியில் பலத்த மழை ஏற்படும் என்பதை ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்புதான் அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments