Publish Date: Fri, 18 Oct 2024 (09:50 IST)
Updated Date: Fri, 18 Oct 2024 (09:52 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ரூபாய் 640 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தங்கம் விலை ஒரு சவரன் 58 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,240 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 57,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,695 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது