Publish Date: Sun, 30 Jul 2023 (08:59 IST)
Updated Date: Sun, 30 Jul 2023 (09:01 IST)
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு மலையேற அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாதத்தின் அமாவாசை, பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பௌர்ணமி மற்றும் பிரதோஷத்திற்காக பக்தர்கள் மலைக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சதுரகிரியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மலையேறி சென்று தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்தில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் மீத நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது குறித்து இன்று வனத்துறை அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.