சில்வண்டு சிக்கும் ஆனா… போக்கு காட்டும் சிறுத்தை! – கோவையில் பரபரப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:19 IST)
கோவை பி.கே.புதூர் பகுதியில் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடும் காட்சி வைரலான நிலையில் அதை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், சிறுத்தை குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் தனியார் குடோனில் சிறுத்தை நடமாடும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments