மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது.
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே, மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு துவங்கப்பட்ட்டது. ஆரம்பத்தில் பயணிகளிடையே அதிக வரவேற்பு இருந்த மெட்ரோ ரயில் தற்போது அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதில்லை.
மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரயிலில் பயணிகளை அதிகரிக்க, ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதல்கட்டமாக வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா நடத்தப்படும், பின்னர் மக்களின் வரவேற்பை பொருத்து மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படும்.
உணவு திருவிழா வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடக்கும், இதில் 25 வகையான உணவுகள் விலை குறைவாக கிடைக்கும், என்றார்