Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி - பரபரக்கும் தேர்தல்

ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி - பரபரக்கும் தேர்தல்
, சனி, 25 நவம்பர் 2017 (10:11 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 
 
இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அதிமுக வேட்பாளரை விரைவில் அறிவிக்கும். தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். திமுக சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
 
மேலும், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தமிழிசை தெரிவித்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
 
மற்றபடி, திமுகவை ஆதரிப்பதாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்துவிட்டன. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவித்துவிட்டது. மேலும், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தை, மார்க் கம்யூனிஸ்டு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
 
தற்போதைய சூழ்நிலைப்படி அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என ஆர்.கே.நகர் தேர்தலில் 5 முனை போட்டி உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை