பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவரது பெயரிலேயே மேலும் 4 பேர் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது
இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர்கள் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஓபிர்எஸ் தரப்பிடம் விசாரித்தபோது வாக்காளர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திமுக மற்றும் அதிமுக இணைந்து செய்யும் சதி இது என்றும் இந்த சதியை நாங்கள் தனித்துவமான சின்னத்தைப் பெற்று முறியடிப்போம் என்றும் கூறியுள்ளனர்
மேலும் இராமநாதபுரம் தொகுதியில் 100 பேர் ஓபிஎஸ் பெயரில் போட்டியிட்டாலும் எங்கள் வேட்பாளரை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம் என்றும் நாங்கள் கேட்டிருக்கும் சின்னம் அப்படிப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்