கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் ஐந்து நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது. அந்த வகையில் சதுரகிரி கோவிலில் பிரதோஷம், கார்த்திகை, பௌர்ணமி வழிபாட்டிற்காக நவம்பர் 24 முதல் 28 வரை 5 நாட்கள் செல்வதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
மலைப்பாதையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆற்றுப்பகுதிகளை இறங்கி குளிக்க கூடாது என்றும் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட நாளில் கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை என தெரிவித்துள்ளனர்.