Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலுக்கு செல்லாத பழவேற்காடு மீனவர்கள்..! புயல் நிவாரணம் வழங்கவில்லை என புகார்.!!

Boat

Senthil Velan

, புதன், 6 மார்ச் 2024 (14:39 IST)
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசு நிதி ஒதுக்கியும், மீன்வளத்துறை முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனக்கூறி பழவேற்காடு 40 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
 
மிக்ஜாம் புயலால் பழவேற்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த 40 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடி வலைகள், படகுகள், என்ஜின்கள் என  பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணம் வழங்க பழவேற்காடு சுற்றுவட்டார 40 மீனவ கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
அரசு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கிய நிலையில், மீன்வளத்துறையினர் உரிய நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி நேற்று பழவேற்காடு பஜாரில் அனைத்து மீனவர்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். 
 
மீன்வளத்துறையினர், மீனவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், நிவாரண தொகை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி பழவேற்காடு பகுதியை சேர்ந்த 40 மீனவ கிராம மக்கள் கடலுக்கும், பழவேற்காடு ஏரியிலும்  மீன்பிடிக்க செல்லவில்லை.

 
அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கும் வரை மீன்பிடிக்க செல்லவதில்லை எனவும், அடுத்த கட்ட போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததற்கு திமுக தான் காரண: விஜயதாரிணி