Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் -டிடிவி.தினகரன்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:17 IST)
சென்னையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையிலுள்ள மீன்கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதிகாரிகள் மீன் கடைகளை அகற்றினர். இதைக் கண்டித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து  கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும்.

அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments