தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால், பல கோடி ஏழை எளிய மக்கள், பல்வேறு தொழிலாளர்கள் உழலும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக இடைவெளி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்,
ஊரடங்கில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாம் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை என அதில் குறிப்பிடப்படுள்ளது.
ஆனால், தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் குறைந்த அளவினான நாட்டுப்படகுகள் செல்லும் என தெரிகிறது.