சென்னையில் மீன் வியாபாரிகள் மீன் மற்றும் நண்டுகளை சாலையில் கொட்டி திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள கடைகளை காவல்துறையின் உதவியோடு அப்புறப்படுத்தினர்.
இதற்கு அந்த பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனைக்கு வைத்திருந்த மீன் மற்றும் நண்டுகளை சாலையில் கொட்டி திடீரென மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.