Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ஐந்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன் பிடித்திருவிழா- ஏராளமானோர் உற்சாகத்துடன் மீன்பிடித்து கொண்டாட்டம்!

Advertiesment
Fishing fetival

J.Durai

மதுரை , வியாழன், 9 மே 2024 (14:30 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடித் திருவிழா  நடைபெற்றது.
 
கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன.
 
அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா  நடைபெற்றது. 
 
இதில் குறவை, கெளூர், கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இதனை ஏராளமானோர் பிடித்துச் சென்று மகிழ்ந்தனர். 
 
இதில் சிறுவர் சிறுமி முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 
 
இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது._
 
நான்கு கிலோ முதல் ஐந்து கிலோ வரை மீன்கள் சிக்கியதாகவும்., 10 ஆண்டுகளுக்குப் பிறகு கணமாயில் நீர் பெருகி இருந்ததால் இந்தாண்டு எதிர்பாராத விதமாக மீன்கள் அதிக அளவில் கிடைத்ததாகவும், இதனை எடுப்பதற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு வேண்டிய மீன்களை சந்தோஷத்துடன் மீன்பிடி திருவிழா மூலம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன் அறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.