ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு அடைந்ததை அடுத்து இன்று அதிகாலையே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். இன்று ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை செய்யப்படும் நிலையில் இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை என்ற நிலையில் இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் மீனவர்கள் உற்சாகமாக இன்று விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனர்.
மீன் பிடிக்காத தடை காரணமாக குறைந்த அளவு மீன்களை சந்தைக்கு வந்ததால் மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதால் அதிக அளவில் மீன்கள் மார்க்கெட்டுக்கு வரும் என்றும் இதனால் மீன்கள் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.