Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷ நிகழ்ச்சி – பக்தர்கள் பரவச ருத்ரதாண்டவம்.

karur
, சனி, 5 நவம்பர் 2022 (21:41 IST)
பூமிக்கடியிலிருந்து தோன்றிய அரசு லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷ நிகழ்ச்சி – பால், சந்தனம், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் பரவச ருத்ரதாண்டவம்.
 
கரூர் அருகே 6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி – திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டியளித்தார்.
 
அதில், தனிக்குழு அமைக்கப்பட்டு மேலாய்வு நடத்தி வேறு ஏதேனும் தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றதா ? என்பதனை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கொடையூர் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் உள்ள முருங்கை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள லிங்கம் மற்றும் நந்தி எம்பெருமானுக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அரசம்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த லிங்கத்திற்கு அரசு லிங்கேஸ்வரர் என்றழைத்து பொதுமக்களால் வணங்கப்படும் இடத்திற்கு அரசு லிங்கத்தினை தரிசித்த திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது., கடந்த தொன்மை காலத்து அதாவது 300 வருட காலம் வாய்ந்த இந்த லிங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 6 அடி லிங்கமும், நந்தி கேஸ்வரர் கண்டெடுக்கப்பட்டு விஷேச அபிஷேக ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தொல்லியல் துறை, வருவாய்த்துறையினராலும் ஆய்வு செய்யப்பட்டு தொல்லியல்துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. மேலும், இதே பகுதியில் அந்த அறிக்கையின் அடிப்படையில் வேறு ஏதேனும் கிடைக்கின்றதா ? என்றும் அகலாய்வு நடத்தப்பட்டு தொல்லியல் சின்னங்கள் வேறு ஏதேனும் கிடைக்குமா ? என்றும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

இங்குள்ள லிங்கம் பெரிய லிங்கம் மகிமை அதிகம், மகிமை குறைவு என்று கூறக்கூடாது உலகில் உள்ள அனைத்து லிங்கத்திற்கும் மகிமை உள்ளது. ஆகவே, பூமிக்கடியில் உள்ள எந்தெந்த காலத்தில் எந்தெந்த லிங்கங்கள் கிடைக்கும் என்று ஒலைச்சுவடியில் எழுதப்பட்டது போல கிடைத்து வருகின்றது.

ஆகவே பூமிக்கடியில் கிடைக்கும் லிங்கங்களை காக்க வேண்டுமென்றும் இந்த இடத்தினை சுற்றுலாத்தலமாக்க, தொல்லியல் துறை, வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பூமிக்கடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அரசு லிங்கேஸ்வரருக்கு பால் அபிஷேகம், சந்தனம், மஞ்சள், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டதோடு, நந்தி கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டது. பின்னர் மகா ஆரத்திகளும், கற்பூர ஆரத்திகளும், வேத பாராயணங்களும் செய்யப்பட்டது   
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா நாட்டில் ஓட்டலில் தீ விபத்து....13 பேர் உயிரிழபு