Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டையில் முதல் கொரோனா பாதிப்பு! குழப்பத்தில் அரசு அதிகாரிகள்!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:59 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக ஒரு இளைஞருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்யமாக இருந்த மாவட்டங்களுள் புதுக்கோட்டையும் ஒன்று. இந்நிலையில் அங்கு 24 வயது இளைஞர் ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த இளைஞரின் கிராமத்தைச் சுற்றி எட்டு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் கரோனா பரவாமல் தடுக்க எல்லைகளை முடக்கி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் அந்த இளைஞருக்கு யார் மூலம் கரோனா பரவி இருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள 4,895 நபர்களில் 3,645 நபர்களின் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அதெ போல டெல்லி மாநாட்டுக்கு சென்று ஊர் திரும்பிய 15 பேர் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்படி எல்லா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப் பட்ட பின்னரும் எப்படி கொரோனா பரவியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர். ஆனால் அவருக்கு இரு முறை கொரோனா சோதனை செய்தும் அவருக்குக் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியில்லை: ஹரியானா தோல்வியால் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு..!

எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு

விஜய் சொன்ன குட்டிக்கதையின் பாண்டிய மன்னர் யார்? இதோ முழு விவரங்கள்..!

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜய் அரசியல் பேச்சு எனக்கு பிடித்திருக்கிறது: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments