Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சானிட்டைசர் மற்றும் சோப்புகளுக்கு ஜி எஸ் டி கூடாது ! ராகுல் காந்தி கருத்து!

சானிட்டைசர் மற்றும் சோப்புகளுக்கு ஜி எஸ் டி கூடாது ! ராகுல் காந்தி கருத்து!
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (08:16 IST)
இந்தியாவில் தற்போதையை நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் பொருட்களுக்கு ஜி எஸ் டி வசூலிக்கப்பட கூடாது எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,0000 ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்கள் ஆகின்றன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பொருட்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜி எஸ் டி வசூலிக்கக் கூடாது எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ‘இதுபோன்ற சூழ்நிலையில், சானிட்டைசர்கள், சோப்பு, மாஸ்குகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறு. கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .’ எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் ஜிஎஸ்டி இல்லா கொரோனா என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளார். கடந்த 17 ஆம் தேதி மத்திய அரசு சானிட்டைசர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி எஸ் டி பற்றி பட்டியல் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சாரம் இல்லாமல் இயங்கும் வெண்ட்டிலேட்டர்! பெங்களூர் நிறுவனம் அசத்தல்!