சென்னை சில்க்ஸ் முழுவதும் எரிந்து நாசமாக தீயணைப்பு துறை தான் காரணம்?: அதிர்ச்சி தகவல்!
சென்னை சில்க்ஸ் முழுவதும் எரிந்து நாசமாக தீயணைப்பு துறை தான் காரணம்?: அதிர்ச்சி தகவல்!
கடந்த புதன் கிழமை சென்னை தி நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்தது. 7 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் மொத்த கட்டிடமும் எரிந்து அதன் ஸ்திரத்தண்மையை இழந்து இடுக்கும் முடிவுக்கு வந்து விட்டனர்.
இந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை நேற்று முதல் தொடங்கியது அரசு. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் இந்த சம்பவத்தின் போது தீயணைப்பு துறையினர் நடந்து கொண்ட விதத்தை பற்றி தங்கள் அதிருப்தியை முதல்வரிடம் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
தீயணைப்பு துறையின் அலட்சியத்தால் தான் தீயை அணைக்க முடியாமல் முழு கட்டிடமும் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. முதல்வரிடம் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியதாக பின்வரும் தகவல்கள் வலம் வருகின்றன.
அதிகாலை 4 மணிக்கு கட்டிடத்தில் தீப்பிடித்ததும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வர 4.30 மணி ஆயிடுச்சு. ஆனால் வந்தவர்கள் வண்டியில் டீசல் இல்லாமல் வந்திருக்கிறார்கள். டீசல் இல்லை போய் வாங்கிட்டு வரச் சொல்லுங்க என்றதும் சென்னை சில்க்ஸை சார்ந்தவர்கள் டீசல் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு வண்டியை வேறு வேறு இடங்களில் வைத்து தண்ணீரை அடிக்க அவர்கள் தயாராகவே இல்லை. அவர்கள் கொண்டு வந்த ஒரு லோடு தண்ணீர் முடிந்ததும் அடுத்த லோடு தண்ணீர் வரவே இல்லை. அதன் பின்னர் இரண்டு லாரி தண்ணீர் வாங்கி கொடுங்கள என சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடமே கேட்டுள்ளனர்.
அந்த தண்ணீரையும் சென்னை சில்க்ஸ் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இது போன்ற காரணங்களால் நேரம் ஆகிக்கொண்டே இருந்தது, தாமதம் ஆக ஆக தீ வேகமாக எரிய ஆரம்பித்துள்ளது. விமான நிலையங்களில் ஃபோம் பயன்படுத்தி தீயை அணைப்பார்கள். இதனையடுத்து விமான நிலையத்தில் பேசி அங்கிருந்து ஒரு வண்டியை கொண்டு தீயை அணைக்க முயற்சி எடுத்துள்ளது சென்னை சில்க்ஸ்.
ஆனால் தீயணைப்பு துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. நாங்க இருக்கும்போது நீங்க எதுக்கு வந்தீங்க என அவங்களையும் உள்ளே விடாமல் அரை மணி நேரம் பிரச்னை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் தான் ஃபோம் வண்டியை அனுமதித்திருக்கிறார்கள்.
இப்படி தீயணைப்பு துறையினர் செய்த தவறால், அலட்சியத்தால் ஒட்டு மொத்த கட்டிடமும் எரிந்து நாசமாகியுள்ளதாக சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சமியிடம் முறையிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இனி எங்காவது தீ விபத்து ஏற்பட்டால் இப்படியெல்லாம் அலட்சியமாக இருக்க வேண்டாம் என நறுக்கென்றும் கூறியுள்ளனர்.