Publish Date: Fri, 04 Oct 2024 (11:41 IST)
Updated Date: Fri, 04 Oct 2024 (11:42 IST)
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனை அடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து, தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும், இதனை அடுத்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால், ரயில் டிரைவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டாலும், பயணிகள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.