Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை காந்தி பூங்கா பகுதியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

கோவை காந்தி பூங்கா பகுதியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:38 IST)
கோவை காந்தி பூங்கா பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


 

 
மூன்று தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள்,  தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த கிடங்கில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
 
நேற்று சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் பலியாகினர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், இன்று கோவையில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள விவகாரம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக எழுந்த புகை, அருகிலிருந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்கும் பரவியது. அங்கிருந்து 6 பேருக்கும் மேல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ் என்பவர் மரணமடைந்துள்ளார்.  அவர் அரசு மருத்துவமனை அதிகாரி என்று தெரிய வந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments