Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.கே. ரித்தீஷ் மீது வழக்குப் பதிவு ; ரூ. 2.18 கோடி மோசடி புகார்

ஜே.கே. ரித்தீஷ் மீது வழக்குப் பதிவு ; ரூ. 2.18 கோடி மோசடி புகார்
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:06 IST)
நடிகரும், முன்னாள் அமைச்சருமான ஜே.கே. ரித்தீஷ் மீது மோசடி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 

 
நாயகன் (கமல் படம் அல்ல) என்ற படத்தில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அவர் திமுகவில் இணைந்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வாக மாறினார். அதன்பின் எம்.பி. ஆக்கப்பட்டார். அதன் பின் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
 
இந்நிலையில், 2013ம் ஆண்டு, போரூரை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான சேர்ந்த ஆதிநாராயண சுப்பிரமணியன் என்பவர், அமெரிக்காவில் உள்ள தனது நிறுவனத்தை விற்று விட்டு தமிழகம் திரும்பினார். மேலும், சென்னையில் புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டார். 
 
அவரிடம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுனத்தை தொடங்கி தருவதாக வாக்களித்த ஜே.கே.ரித்தீஷ் அவரிடம் ரூ.2.18 கோடி பணம் பெற்றதாகவும், ஆனால், அப்படி எந்த நிறுவனத்தை தொடங்கவுமில்லை, தனது பணத்தை திருப்பி தரவுமில்லை எனவும், இது தொடர்பா ஜே.கே. ரித்தீஷ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
எனவே, தற்போது ஜே.கே.ரித்தீஷ் மீது வழக்குபதிவு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிவிட்டது. எனவே, போலீசாரும் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட 7 பே மீதும், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ஆனால்,ஜே.கே.ரித்தீஷ் அப்போது எம்.பி.யாக இருந்ததால், பலமுறை புகார் அளித்தும், அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே, ஆதிநாராயணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 மாதங்கள் வரை நீடிக்கவிருக்கும் ஜியோ சேவை??