Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போலீஸாருக்கு வசூல் மழை !

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:19 IST)
சென்னையில் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மட்டும் இதுவரை 2,12,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு பொறுத்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை அறிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் சென்னையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னையில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
இதனை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும் இதுவரை 2,12,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments