Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்த போலீஸ்..

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:52 IST)
திருப்பூரில் காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாததால் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வெளியூருக்கு சென்ற அவர், தனது வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவரது செல்ஃபோனுக்கு திருப்பூர் போக்குவரத்து போலீஸாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது கார் பதிவு எண் குறிப்பிட்டு, உங்களது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லை, அதனால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது என கூறியிருந்தது.

இதனை பார்த்த செல்வக்குமார் குழப்பமடைந்தார். இது குறித்து அவர் திருப்பூர் காவல் நிலையத்தில் விபரம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது கார் எண்ணை யாராவது திருடி அவர்களது மோட்டார் பைக்கில் அச்சிட்டுள்ளனரா என சந்தேகிப்பதாகவும் தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments