Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடிட்டு ஜெயிலுக்கு போன சசிகலா; அதிமுகவை விளாசிய திமுக: நிதானமிழந்து நேரலையில் சண்டை!

திருடிட்டு ஜெயிலுக்கு போன சசிகலா; அதிமுகவை விளாசிய திமுக: நிதானமிழந்து நேரலையில் சண்டை!

Advertiesment
சசிகலா
, ஞாயிறு, 26 மார்ச் 2017 (18:36 IST)
அதிமுக சசிகலா அணியை சேர்ந்த பேராசிரியர் தீரனும், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சிவ ஜெயராஜும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வார்த்தை போரில் ஈடுபட்டனர்.


 
 
திமுகவை விமர்சித்துக்கொண்டு இருந்த அதிமுக சசிகலா அணியை சேர்ந்த தீரன் அந்த கட்சியை தில்லுமுல்லு கட்சி என்று குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திமுகவின் ஜெயராஜ் திருடிட்டு ஜெயிலுக்கு போனவங்கள எல்லாம் தலைவரா வச்சுக்கிட்டு பேச்சா இது என பேசினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த தீரன் திமுகவின் கனிமொழி, ராஜா ஜெயிலுக்கு சென்றதை உல்லாசப்பயணமா போனாங்க என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் இருவரும் நிதானம் இழந்து ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.
 
இதனால் விவாதத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. நெறியாளர் இருவரையும் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியும் இருவரும் தொடர்ந்து சொற்போரில் ஈடுபட்டனர். இதனை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழியும், ராஜாவும் உல்லாச பயணத்துக்கா போனாங்க: தீரனின் தரம் தாழ்ந்த பேச்சு! (வீடியோ இணைப்பு)