Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

vinoth

, ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (08:13 IST)
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நள்ளிரவு புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்துள்ளதால் இனி மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீதாராங்கள் நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட அளவு 20 அடியைத் தொட்டுள்ளது. அதன் மொத்த உயரம் 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரிக்கு வரும் நீர்வர்த்தின் அளவு 3,675 கன அடியாக உள்ளது. 

மழையின் அளவு குறைந்துள்ளதால் விமானப் போக்குவர்த்தும் தொடங்கியுள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் தரைவழிப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நகர் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடிக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் இன்னும் ஒரே இடத்தில் நகராமல் இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள தகவலில் “அதிகாலை மூன்று மணி முதல் 6 மணி வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்காமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!